மயிலாக யானையாக கத்தரித்து
வடிவு பெற்றிருந்த
பூங்கா செடிகள் கண்டு வியந்தாய்.
வெட்டுத் தழும்புகளிலிருந்தேபுதிதாய் பச்சைத் தளையிடுகின்றன
உருவம் பெறுகின்றன.
செதுக்கம் பெறவேண்டியவைகளை
ப்ரியநேசங்களோடு பகிர்ந்தபோது
காயங்கள் உருவாக்கி
எளிதாக செல்லமுடிகிறது உன்னால்.
தழும்புகளிலிருந்து
மீண்டும் துளிர்த்திட மரம்செடியல்ல
வடு சுமந்த மனம்.


2 comments:
சூர்யா,
நல்லா இருக்கு.
//என்பதைஅறிவுறுத்தினேன்//.
தேவையில்லை என்று நினைக்கிறேன்.
K.Ravishankar said...
சூர்யா,
நல்லா இருக்கு.
//என்பதைஅறிவுறுத்தினேன்//.
தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நன்றி ரவிஷங்கள்
களைந்துவிட்டேன்.
Post a Comment